Fri. May 17th, 2024

குப்பை கொட்டும் பிரச்சினை, ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் கரவெட்டி பிரதேச மக்கள்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச பிரதேச சபைக்கு உட்பட்ட  உப்பு ரோட்டில் அமைந்திருக்கும் கழிவு கொட்டும் இடத்தில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களிலுள்ள குப்பை கழிவுகள் கொட்டுவதற்கு போதிய விஸ்தீரணம் இல்லாததால் அவ்விடத்தில் குப்பைகள் நிரம்பி வழிகின்றது. பிரதேச சபைக்குட்பட்ட. கப்புதூ வீதிக்கு இரு பக்கங்களும் எமது பிரதேச மக்களுடைய குப்பைகளை கொண்டு கொட்ட முடியாமல் பிரதேசசபை திண்டாடும் நிலையில் பருத்தித்துறை நகரசபையின் குப்பைகளை எமது பிரதேசத்திலுள்ள குப்பை கொட்டும் இடத்தில் கொட்டுவதற்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அனுமதி கொடுத்துள்ளது.

அதனால் ஒரு நாளைக்கு மூன்று முறை குப்பைகளைஉழவு இயந்திரத்தின் மூலம் கொட்டி செல்கின்றார்கள். அதனால் அப்பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் தொடர்ந்தும் பருத்தித்துறை நகர சபையின் குப்பைகள் எமது குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படும் ஆனால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறும் என கிராம மக்கள் கூறுகின்றார்கள். குப்பை கொட்டும் இடத்தில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் தனது கடமைகளை முடித்து விட்டு சென்ற பிறகு பொதுமக்கள்  தங்களுடைய வீட்டில் உள்ள குப்பைகளை கொண்டு வந்து கப்புதுக்கு செல்லும் வீதிகளில் இரு மருங்கும் கொட்டிக் செல்லுகின்றார்கள். இதனை எதிர்த்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு இறங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என எங்களுக்கு தெரிவித்துள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்