Sun. May 19th, 2024

காணிகளை அளவீடு செய்ய உத்தரவு!! -கோத்தாபாய பிறப்பித்தார்-

நாடு முழுவதிலும் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கே  ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட மொத்த நில அலகுகளின் எண்ணிக்கை 14 மில்லியன். அவற்றில் 10 வீத காணிகளின் கடந்த வருடம் அளவீடு செய்யப்பட்டது.

மீதமுள்ள 90 வீதமான காணிகளின் அளவீட்டுப் பணிகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான வசதிகள் உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

முறையான கணக்கெடுப்பின் பின்னர், அனைத்து நில அலகுகளுக்கும் உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அளவீட்டுப் பணிகளுக்காக நவீன கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அளவீட்டுப் பணியில் நிலவும் மனிதவள வெற்றிடத்திற்காக புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றதா என்பது தொடர்பாக இதன்போது பரிசீலிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்