Fri. May 17th, 2024

கரவெட்டி பிரதேச சபையில் கண்டன தீர்மானம் குறித்து இழுபறி

02.06.2020 இன்று செவ்வாய்க்கிழமை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் விசேட பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இரண்டு மணி அளவில் ஆரம்பமான இந்த கூட்டம்  தவிசாளர் தங்கவேலாயுதம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சந்தை திறப்பதை பற்றி ஆரம்பமான கூட்டம்,  பின்னர் சுகாதார உத்தியோகத்தர்களிற்கு எதிரான கண்டன கூட்டமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட கூட்ட தீர்மானத்தை ஆளும் கட்சி மற்றும்  எதிர்க்கட்சியில் இருந்த உறுப்பினர்கள்  சம்மதம் தெரிவிக்க மறுப்புத் தெரிவித்தார்கள். இதனால் உறுப்பினர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கூட்டம் முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியேறும்போது ஆளுங்கட்சி கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் புஷ்ப வசந்தனனுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பரஞ்சோதி மீது புஷ்ப வதனன் அடிப்பதற்கு முற்பட்டபோது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பரஞ்சோதியையும் புஷ்ப வசந்தனையும் சமரசம் செய்ய முற்பட்டார். ஆளுங்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் 6 மணிக்கு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். புஸ்பவனம் தனக்கு அடிக்க வந்ததாகவும் நடவடிக்கை எடுக்குமாறும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் பிரதேச சபை கூட்டங்கள் நடைபெறும் போது இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி விவாதங்கள் வாக்குவாதங்கள் வருவது வழமை என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்