Thu. May 16th, 2024

உங்களுக்கு நல்லா நுளம்பு கடிக்குதா ? அப்ப இதை படிங்க

ஐக்கியநாடுகள் சுகாதார அமைப்பால் இலங்கை மலேரியா இல்லாத நாடாக 2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இப்படி அறிவிச்சால் நுளம்பு தொல்லை இல்லாமல் போகுமெண்டால்  அதுதான் இல்லை. இப்பவும் மழைக்காலம் வந்தால் நகரம் கிராமம் எண்ட வித்தியாசம் இல்லாமல் நுளம்பு தொல்லை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

ஒரு முப்பது வருடம் முன்னால மட்டும் வேப்பமிலையையும் வேப்பங்கொடடையையும்  போட்டு புகைச்சு நுளம்புக்கு எதிர்ப்பு கட்டினோம். பின்பு வந்த வகைவகையான நுளம்பு சுருளை புகையைவிட்டோம். தற்போது பாவனையில் உள்ள மின்சாரத்தில் பவிக்கக்கூடிய நுளம்பு வத்திகளும் உபயோகித்தாகிவிட்டது.  இதை விட்டு தற்போது வெளிநாட்டில் இருந்தது வரும் நம்மவர்கள் கொண்டு வரும் ஸ்பிரே, கிரீம் போன்றவையும் உடலில் பூசி பார்த்தாச்சு.அனால் நுளம்புக்கடி மாத்திரம் காலம் காலமாக  ஒரேமாதிரியே இருக்கின்றது.

 

இதில புரியாத புதிராக பத்து பேர் இருக்கிற இடத்தில ஒருத்தரையே சுத்தி சுத்தி நுளம்பு கடிப்பதும், மற்றுமொருநபரை நுளம்பு கண்டுக்காமல் விடுறதையும்  நாங்க காலம் காலமாக கண்டுவருகிறோம். இது விடயமாக நாங்கள் நகைச்சுவையாக பேசுவதும் உண்டு, சீனி இரத்தத்தில் கூட இருந்தால் நுளம்புக்கு பிடிக்கும் எண்டு. அதில என்ன விடயம் இருக்கு எண்டு பாப்பம் இப்போது!

 

விட்டமின் பி -B

விட்டமின் பி தான் நுளம்புகளுக்கு  மிகச்சிறந்த எதிரியாம். விட்டமின் பி அதிகமாக உள்ளவர்களிடம் நுளம்புகள் அண்டவே அண்டாதாம் . இப்ப உங்களுக்கு தெரியுதா? நுளம்பு வத்திகளையும், ஸ்பிரே,கிரீம் எல்லாத்தையும் தூக்கி ஓரமா எறிஞ்சிட்டு விட்டமின் பி அதிகமா இருக்கிற தானியங்கள் , இறைச்சி முட்டை  பால் உணவுகைள  நிறைய சாப்பிடணும்.

இதில கொசுறு செய்தி என்னவென்றால், நுளம்புகளுக்கு பெண்களை தன அதிகம் பிடிக்குமாம்.பெண்களின் உடலில் இருக்கின்ற ஈஸ்ட்ரஜோன்கள் தான் நுளம்புகளை சுண்டி இழுக்கிறதாம். ஆகவே பெண்களே நீங்க கொஞ்சம் உசாராவே கூடவா இந்த உணவுகைள சாப்பிடுங்க.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்