Thu. May 16th, 2024

ஈஸ்டா் தாக்குதலுக்கும் கோட்டாவுக்கும் என்ன தொடா்பு? ஐ.தே.கட்சியின் ஊடக பிாிவை கண்டு நடுங்கும் கோட்டா.

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கும் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவுக்கு தொடாபுள்ளதாக ஐ.தே.க ட்சி விடீயோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டு வருவதாக பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளதா.

இந்த காணொளி சம்பந்தமான சில விடயங்களை பொதுஜன பெரமுனவினர் கூறியுள்ளனர். இதில் ஒரு காணொளியை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளர்

துஷார வன்னியாராச்சி தயாரித்து வருவதாக பொதுஜன பெரமுனவினர் கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள துஷார வன்னியாராச்சி, தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து

விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். உண்மையில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக இப்படியான காணொளி தயாரிக்கப்பட்டுள்ளதா

அல்லது தயாரிக்கப்படுகிறதா என்ற தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் ராஜபக்ச தரப்பின் பிரசாரப் பிரிவினர் இது குறித்து கடும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

பொய்யான காணொளி என்றால், எவரும் இந்தளவுக்கு அச்சப்பட வேண்டிய தேவையில்லை எனவும் பொய்யானது என்பதை உறுதிப்படுத்த காரணங்களை முன்வைக்க முடியும்

எனவும் பொய்யான காணொளியை தயாரித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரான் உட்பட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு புலனாய்வு ஒற்றர்கள் என்ற ரீதியில் ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் வசதிகளை வழங்கி,

சம்பளம் கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவே அண்மையில் கண்டியில் மாநாயக்க தேரர் ஒருவரிடம் கூறியிருந்தார்.

அதேவேளை தான் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிக்க உள்ளதாக அன்றைய பாதுகாப்பு

அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வரலாற்றில் முதல் முறையாக

முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலுக்கு செல்ல முடியாமல் போனதாகவும் குண்டுகளை வெடிக்க செய்த சஹ்ரான்கள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டியதில்லை எனவும்

குண்டு வெடிக்க போவது தெரிந்தும் உறங்கிக் கொண்டிருந்த ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கத்தோலிக்க பங்கு தந்தை ஒருவர், இந்த தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவலை

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிந்திருந்ததாக கூறியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக முதலை கண்ணீர் வடிக்கும் ராஜபக்சவினர்,

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெற குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்