Mon. May 20th, 2024

இந்து சமய தொண்டர் சபையின் அவசர ஊடக அறிக்கை

தலைமைச் செயலகம்,
இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை,
இலங்கை
24-09-2019
ஊடக அறிக்கை
புத்த பிக்குவின் உடல் பிள்ளையார் கோவிலின் வளாகத்தில் எரியூட்டப்பட்டமை,
சட்டத்தரணி சுகாஸ் மற்றும் பொது மக்கள் தாக்கப்பட்டமையை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்றுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய வளவை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த புத்த கோவிலின் பிக்கு உயிரிழந்த நிலையில் இவரது உடலை பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் தகனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினால் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
 எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
ஞனசாரதேரர் தலைமையிலான சிங்கள பௌத்த சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறை பொறுப்பதிகாரிக்கு முன்னிலையில் நீதி மன்றின் உத்தரவை மீறி பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிப் பகுதியில் தகனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
 அவர்களது செயலைத் தடுப்பதற்கு குறித்த காவல்துறை அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி தகனம் செய்வதற்கு  எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களை குறித்த காவல்துறை அதிகாரியும், காவல்துறையினரும் இணைந்து அச்சுறுத்தியதுடன், பிக்குகளின் அடாவடித்தனமான செயற்பாட்டிற்கும் உறுதுணையாகச் செயற்பட்டிருந்தனர்.
நீதி மன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடலைத் தகனம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோமான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு அங்கு திரண்டிருந்த தமிழ் மக்களுடன் இணைந்து சட்டத்தரணிகள் முயன்றபோது சட்டத்தரணி சுகாஸ் உட்பட நான்கு பேர் பிக்குகளினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான செயலை பார்க்கும்போது ஒரு நாட்டின் நீதித்துறையின் சட்டங்களை மதிக்காது அடாவடி செய்பவர்கள் தர்மத்தை போதிப்பவர்கள் சட்டதிட்டங்களை மதித்து செயற்படுபவர்கள்தான் பயங்கரவாதிகள் அவர்கள் மீது தான் இன,மத முரண்பாட்டை தூண்டுகின்றனர் என்று பயங்கரவாத தடைசட்டம் பாயும் இது என்ன நீதி பிரிவினையை தூண்டுபவர்கள் இவர்கள் தானே பயங்கரவாதிகள்.
சைவசமயத்தவர்களின் புனிதத் தலங்களில் ஒன்றான நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணியருகில் எமது சைவமரபுகளுக்கு முரணான வகையில் பிக்குவின் உடலம் எரிக்கப்பட்டமைக்கும், சட்டதரணி சுகாஸ் மற்றும் பொது மக்கள் மூவர் தாக்கப்பட்டமைக்கும் எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் இந்த நாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது மாறாக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் சம்மந்தப்பட்டவர்கள் வர்கள் கவனத்தில் கொள்ளவும்.
ஊடகப்பிரிவு,
இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை,
இலங்கை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்