Sat. May 18th, 2024

அருட்தந்தையை தாக்கியவர்-ஏற்கனவே பெண்ணுடன் தவறாக நடக்க முற்பட்ட அன்வர் என்ற பொலிஸ் அதிகாரியே

தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் இடம் மாற்றப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட முஹமட் அன்வர் என்ற பொலிஸ் அதிகாரியே நேற்றைய தினம் தோட்டவெயில் அருட்தந்தை மீது தாக்குதலை மேற்கொண்டவர் என தெரிய வந்துள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது தன்னுடன் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வதாகவும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும்  கூறி அண்மையில் குடுமு;ப பெண் ஒருவர் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

மேலும் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவாகி இருந்நது.இந்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி உடனடியாக தலைன்னார் பொலிஸ் நிலையத்தில் இருந்து மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டார்.

-மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.இந்த நிலையில் புதன் கிழமை மன்னார் தோட்டவெளி பகுதியில் சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட முஹமட் அன்வர் சம்பவ இடத்திற்குச் சென்றார்.

-எனினும் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு வழங்கியதோடு ,போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் சம்பவ இடத்திற்குச் சென்ற பங்குத்தந்தை பெனோ அலெக்சான்டர் சில்வா ஆகியோரை குறித்த பொலிஸ் அதிகாரி அச்சுரூத்தியதோடு தனது கையடக்க தொலைபேசியில் விடியோ எடுத்ததோடு,பெண்களை பார்த்து தகாத வார்த்தைகளினால் பேசி சுடுவேண் என மிரட்டியுள்ளார்.

-மேலும் அங்கு மக்களுக்காக நின்ற அருட்தந்தையை பார்த்து உமக்கு இங்கே என்ன வேளை? உமது வேளையை பார்த்துக்கொண்டு போ என கடுமையான வார்த்தைப்பிரையோகத்தை மேற்கொண்டடோடு,அருட்தந்தையை தள்ளி விட்டு தாக்கியுள்ளார்.

-இதனால் மக்கள் கொந்தழித்தனர்.எனினும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மறைமாவட்ட குரு முதல்வர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட முஹமட் அன்வர் என்பவர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்களிடம் கையூட்டல்களை பெற்றுக்கொள்ளுவதாகவும்,குறிப்பாக முறைப்பாட்டிற்கு வரும் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்று அவர்களுடன் உரையாடுவதாகவும் தனிமையில் சென்று சந்திப்பதாகவும் தெரிய வருகின்றது.

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்