Sun. May 19th, 2024

அமரர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 18. ஆண்டு நினைவு நாள் நெல்லியடியில் அனுஷ்டிப்பு

06.06.2020 இன்று தமிழ் தேசிய இனத்தின் தலைவர் அமரர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 18. ஆண்டு நினைவு நாள் நெல்லியடியில் உள்ள அவரது சிலையருகில் கொண்டாடப்பட்டது. பாராளுமன்ற  உறுப்பினராக மக்கள் பணியாற்றிய முருகேசு சிவசிதம்பரம் கரவை மண்  பெற்றெடுத்த மாபெரும் தலைவர். தமது சட்டத் திறமையால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகளில் இலவசமாக வாதாடி இருந்தார்.

இன்று நெல்லியடி நகரில் அமைந்துள்ள முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் சிலைக்கு கரவெட்டி ஒன்றியத்தின் தலைவர் உபாலி பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் இளைப்பாறிய அதிபர் ராகவன்,  சிவம்,  வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் கருணானந்தன், வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினர் சிவஞானசுந்தரம் மற்றும் பொதுமக்கள் வர்த்தக சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சகிதம் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றிவணக்கம் செலுத்தினார்கள்.

இந்நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ர துணைத்தலைவர் ச. அரவிந்தன் மாலை அணிவித்தார். கரவெட்டி ஒன்றியத்தினால் இந்த நிகழ்வு வருடா வருடம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முண்டியடித்து மாலை அனிவிப்பதற்கு வருவது அச்சரியத்தை கொடுத்துள்ளது.  தேர்தல்காலங்கள் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் முந்தி அடிப்பது வழமையான நிகழ்வே.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்