Sat. May 18th, 2024

அத்தியாவசியப் பொருட்களை அதிகூடிய விலையில் விற்கப்படுவதாக அங்கஜன் ராமநாதன் தெரிவிப்பு

அத்தியாவசியப் பொருட்களை அதிகூடிய விலையில்
அங்கஜன் ராமநாதன் தெரிவிப்பு
யாழ் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ள காலப்பகுதியில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வது அநீதியான விடயமாகும் என யாழ் மாவட்ட அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை கொள்வனவு செய்யும் போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டுப்பாட்டு விலைகளை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.
இதன் காரணமாக வறுமைக் கோட்டின் கீழுள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கி வைத்து கட்டுபாட்டு விலையை மீறி விற்பனை செய்வோரை கைது செய்வது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கூறினார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான உரிய நடவடிக்கைகளைய மேற்கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்கள் நியாயமான விலையில் விற்றால் மாத்திரமே அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு பெறும் தரப்பினர் அதற்குரிய உரிய பலனை பெற்றுக் கொள்ள மு

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்