Mon. Jul 1st, 2024

அதிபர் ஆசிரியர்களுக்கான தொழிற்சங்க போராட்டம் நிறைவு பாடசாலை வழமை போல் நடைபெறும் – ஜோசப் ஸ்டாலின்

அதிபர் ஆசிரியர்களுக்கான தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதுடன் நாளை வெள்ளிக்கிழமை முதல் அதிபர் ஆசிரியர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று  புதன்கிழமை கொழும்பில் போராட்டம் நடைபெற்றது. அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்க வேண்டியதை கேட்கும் அதிபர், ஆசிரியர்களின் ஜனநாயகரீதியான  போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, அதிபர், ஆசிரியர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை  நடாத்திய ரணில்- ராஜபக்ஸ அரசாங்கம் நடாத்தியுள்ளது. இந்த அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை அதிபர், ஆசிரியர்களின் சகயீன விடுமுறைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இத்தாக்குதலில் இரு ஆசிரியர்கள் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் விதமாக நேற்றைய தினமும், இன்றைய தினமும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆதரவு வழங்கி போராட்டத்திற்கு வலுச் சேர்த்துள்ளனர். எனவே நாளை முதல் அதிபர் ஆசிரியர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளனர்.
இதற்கிடையில் கல்வி அமைச்சர் நாளை பாடசாலை நடைபெறும் எனவும், ரணில் அரசாங்கம் ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றவுள்ளதாகவும் என எம்மை அச்சுறுத்தியமைக்காக எமது போராட்டத்தை கைவிடவில்லை. நாம் ஒரு நாள் மட்டுமே போராட்டத்திற்கு அறிவித்தோம். அன்றைய தின போராட்டத்தில் எம்மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கைக்கே இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாருக்கும் பயந்து போராட்டத்தை கைவிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்