Thu. Oct 3rd, 2024

ஹட்டன் மயானத்தில் மண்டையோடுகள் மாயம்!

ஹட்டன் , யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 மனித சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சம்பவமானது குறித்த தோட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெலிங்டன் தோட்டத்தில் இன்று (01) காலை புல்லு வெட்ட இப்பகுதிக்கு வருகை தந்திருந்த நபரொருவர் புதைகுழிகள் தோண்டப்பட்டு மனித எச்சங்கள் எடுக்கப்பபட்டுள்ளதை கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பில் ஊர் மக்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து ஹட்டன் பொலிஸாருக்கும் உடனடியாக தகவல் வழங்கப்பட்டது
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதில் 24, 68, 70 ஆகிய வயதுகளுடையவர்களின் மனித எச்சங்கள் அங்கிருந்து எடுத்து கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் , அனேகமாக மண்டை ஓடுகளே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் ஒரு சடலம் புதைக்கப்பட்டிருந்த குழியை தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் வெலிங்டன் தோட்டத்தில்அச்சநிலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்