மைக்கல் நேசக்கரம் ஊடாக ரூபா 70,000 உதவித்திட்டம்
போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக ரூபா 70,000 உதவித்திட்டம் வழங்கி வைப்பு
ஊரேழு மேற்கு பகுதியில் வசித்துவரும் சிவகுமார் பவித்திரா (வயது 20 ) என்ற மாணவிக்கு இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்துள்ளன அவருக்கு அவசரமாக இரண்டு சிறுநீரக மாற்றுச்சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது மிகவும் வறுமையான குடும்பம்என்பதினால் அவர்களினால் பெரும் தொகை நிதியை செலவு செய்யமுடியாத நிலையில் உள்ளனர் அதற்கு அமைவாக பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் இராசதுரை இராஜி என்பவர் வழங்கிய நிதியில் இருந்து ரூபா 50,000 மைக்கல் நேசக்கரம் ஊடாக10-09-2019 செவ்வாய்கிழமை இன்று காலை 11-00 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி விநாயகர்புரம் பகுதியை சேர்ந்த தந்தையை இழந்த பாலச்சந்திரன் கஜனி என்ற மாணவி கல்வியில் சிறந்து விளங்கி வரும் போதும் அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளது தாயார் கூலி வேலை செய்து மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வரும் நிலையில் பிள்ளைகளின் கல்வி செலவுக்கு பெரும் துயரங்களை எதிர் கொண்டு வருகின்றார் மூன்று பிள்ளைகளுக்கும் பாடசாலை செல்ல துவிச்சக்கர வண்டி இன்றி நீண்ட தூரம் நடத்து சென்று வருவதாகவும் தமக்கு ஒரு துவிச்சக்கர வண்டி ஒன்றை வழங்குமாறு கோரியிருந்தனர் அதற்கு அமைவாக குமரேஸ்வரன் ஆர்த்திகா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு இன்றாகும் அதனை முன்னிட்டு குறித்த மாணவிக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது