மாலுசந்தியடியில் கொள்ளை சம்பவம்
இன்று விடியற்காலை 1 45 மணியளவில் மாலுசந்தி தம்பியோட பகுதியிலுள்ள வீட்டில் பின் கதவை உடைத்து வீட்டினுள் சென்ற திருடன் சாமி தட்டுக்கு மேல் இருந்த 35,000 ரூபா பணத்தையும் ஒன்றரை பவுண் நிறையுடைய மோதிரத்தையும் மொபைல் போன் ஒன்றையும் திருடன் எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது அந்த வீட்டிலிருந்த முதியவர வெள்ளசேட் அணிந்த திருடனை கண்டுள்ளார். அந்த வீட்டில் 70 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் தனிமையில் இருந்துள்ளார். இன்று பிற்பகல் நெல்லியடி போலீசில் அவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிசார் விசாரணை ஆரம்பித்துள்ளார்கள்