Sat. Apr 11th, 2026

தைமாத பலன்- மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு முக்கியமான கிரகங்கள் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தை மாதம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டிய மாதமாக அமைந்துள்ளது. தை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சுக்கிரன், மகர ராசியில் சூரியன், சனி, புதன், கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
கிரகப்பெயர்ச்சிகளைப் பார்த்தால் 1ஆம் தேதி மகர ராசியில் புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. 3ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்கிறார். 16ஆம் தனசு ராசியில் சுக்கிரன் வக்ரம் முடிகிறது. 22ஆம் புதன் வக்ர முடிவுக்கு வருகிறது. 30ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் விரைய ஸ்தானத்தில் ராகு, ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சூரியன், சனி, புதன், ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
மிதுனம் புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே இந்த மாதம் நீங்கள் அதி கவனமாக இருப்பது நல்லது காரணம் எட்டாவது வீட்டில் சூரியன், சனி, மூன்று கிரகங்கள் இணைந்துள்ளன. அஷ்டமத்தில் இணைந்துள்ள கிரகங்களால் கவனமும் நிதானமும் தேவை. நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. கூடுமானவரைக்கும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது ரொம்ப நல்லது.
கோபத்தை தவிர்க்கவும் ராசி நாதன் புதன் வக்ரமடைகிறார். அஷ்டம ஸ்தானத்தில் சனியோடு சூரியனும் புதனும் இணைந்திருப்பதால் வேலை செய்யும் இடங்களில் கவனமும் நிதானமும் தேவை. பூர்வீக சொத்து விசயங்களில் பின்னடைவை சந்திப்பீர்கள். சொத்துத்தகராறு வர வாய்ப்பு உள்ளது. அதிக கோபமும் மன அழுத்தமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொது இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெரிய அளவில் பண முதலீடுகள் செய்ய வேண்டாம்
செலவுகள் அதிகமாகும் விரைய ஸ்தானத்தில் உள்ள ராகுவினால் இந்த மாதம் செலவுகள் அதிகமாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபார ரீதியிலான முதலீடுகளில் கவனம். கணவன் மனைவி இடையே அவ்வப்போது சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. வாக்கு வாதம் வரும் போது விட்டுக்கொடுத்து செல்லவும். மூன்றாவது மனிதர்களை உங்களின் குடும்ப விவகாரங்களில் தலையிட விடாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள பெரியவர்களின் சொல் பேச்சு கேட்டு நடப்பது நல்லது. குரு பகவானின் பார்வையால் சில நேரங்களில் நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் பயணங்களால் நன்மை உண்டாகும்.
திடீர் திருமண யோகம் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் சுப காரியங்கள் நடைபெறும். திடீர் திருமண யோகம் வரும். பொருளாதார பிரச்சினைகள் தலையெடுக்கும் கவனம் தேவை. தை திருநாளில் குலதெய்வத்தை வணங்க மறக்காதீர்கள். கன்னிப்பெண்கள் திருமண தடைகள் மஞ்சள் குங்குமம் வாங்கி தானம் தரலாம்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed