தயாராகிறது மயிலிட்டி துறைமுகம்..! பிரதமா் நாளை மக்களிடம் கொடுக்கிறாா்.
யாழ்.மயிலிட்டி துறைமுகத்தின் 1ம் கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவினால் நாளை காலை துறைமுகம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதற்காக துறைமுக பகுதி தயாா்ப்படுத்தப்படுகின்றது. இதேவேளை மயிலிட்டி பகுதியில் பொதுமக்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றையும் பிரதமா் வழங்கிவைக்கவுள்ளாா்.
இதற்காக குறித்த வீடுகளும் தயாா்ப்படுத்தப்படுகின்றது.