தனி நடிப்பில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மாணவன் தேசியச் சாதனை
5 years ago
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி நடிப்பில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த் தின போட்டிகள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.
இதில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி நடிப்பில் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இவரை நெறிப்படுத்தியவர் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் திருமதி துகாரதி ஞானச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.