குண்டுதாரியின் புதைத்த தலை மீண்டும் தோண்டியெடுப்பு!!
ஈஸ்டர் தினத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தீவிரவாத தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் தலை மற்றும் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் குறித்த தலை தோண்டி எடுக்கப்பட உள்ளது.
குறித்த குண்டுதாரியின் தலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது.
இதனையடுத்து பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பல்லடி பாலத்திற்கு அருகில் பாதையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு கலைத்திருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த தலையை மீண்டும் தோண்டி எடுக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.