Thu. Sep 17th, 2026

கிண்ணத்தை கைப்பற்றுமா யாழ் பல்கலைக்கழக அணி 

இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை ராஜரட்ட பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியை எதிர்த்து ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி மோதவுள்ளது.
இதில் யாழ் பல்கலைக்கழக அணி 2004 ம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழக அணியுடன் மோதி  சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியதுடன் அதன் பின்னர் 2016 ம் ஆண்டு காலம் வரை தமக்கான இறுதி வாய்புக்களை நழுவ விட்டனர். மீண்டும்   2017ம் ஆண்டில் இருந்து வீறுகொண்ட யாழ்  பல்கலைக்கழக அணி 2017இல் இறுதியாட்டம் வரை முன்னேறி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக அணியுடன் மோதி 2ம் இடத்தை பெற்றனர் . 2018ம் ஆண்டு 3ம் இடத்திற்கான ஆட்டத்தில்  கழனி பல்கலைக்கழக அணியுடன் மோதி வெற்றி வாகை சூடியது. இவ்வாண்டு இறுதியாட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணியுடன் மோதவுள்ளது. இவ்விரு அணிகளும் இவ்வாண்டுக்கான தொடரில் போட்டிகள் எதிலும் தோல்வியடையாது முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

About The Author

Share This:

Leave a Reply