இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த 26பேர் கைது
பங்களாதேஷிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த 26பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா– பங்களாதேஷ் எல்லையில் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்தவர்களையே இந்திய எல்லைப் பாதுகாப்பு படை இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளது.
பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருபவர்கள் கைது செய்யப்படுவதும், கால்நடைகளை கடத்துபவர்கள் கைது செய்யப்படுவதுவும் வழமையாகும்.
காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 26பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.