Sun. May 19th, 2024

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்! மீண்டும் விசாரணை ஆரம்பம்.

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடா்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

அதற்கமைய குறித்த விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 305 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக

ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் தெரிவித்தார். கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பேராசிரியர் ரொஹான் குணரத்ன மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள்

உள்ளிட்ட பலர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை,

கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்