Wed. May 15th, 2024

கோத்தபாய பக்கம் தாவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகரும் அமைச்சருமான சாகல ரத்நாயக்க பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபய ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாகலா ரத்நாயக்கவுக்கு கோதபய ராஜபக்ஷவுடனும் அவரது மனைவியுடனும் நல்ல உறவு இருப்பதாக கூறப்படுகிறது.
சாகல ரத்நாயக்க போலீஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த பொழுது மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமருடன் நெருக்கமான ஒரு சக்திவாய்ந்த நபர் தனது கட்சியை ஆதரிக்கத் தயாராக உள்ளார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சஜித் பிரேமதாச சார்பாக நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் சாகலா ரத்நாயக்க கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்