Zero செய்முறை பரீட்சையில் தமிழ் ஆரம்பிப்பாளர் கருணாகரன்
தடகளப் போட்டியில் ஓட்ட நிகழ்ச்சிகளில் zero நேரக்கணிப்பிற்கு ஆரம்பிக்கப்டும் துப்பாக்கியுடன் இலத்திரனியல் வயர் பொருத்தப்பட்டு கணிக்கப்படும். இந்த செய்முறை அனுபவம் வாய்ந்த ஆரம்பிப்பாளர்களினாலேயே இடம் பெறுவது வழமை. ஆனால் தற்போது கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற சிரேஷ்ட மெய்வல்லுநர் தேசிய மட்ட போட்டியில் ஆரம்பிப்பாளராக கடமையாற்றிய தமிழ் ஆரம்பிப்பாளர் கருணாகரன் அவர்களால் Zero செய்முறை பரீட்சை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.