Wed. Jul 22nd, 2026

VK SPORTS அக்கடமியினால் வடமாகாண ரீதியாக மாபெரும் சதுரங்கச் சுற்றுப் போட்டி

VK SPORTS அக்கடமியினால் வடமாகாண ரீதியாக மாபெரும் சதுரங்கச் சுற்றுப் போட்டியானது  இரண்டாவது முறையாக எதிர்வரும் 2ம் திகதி யா/வைத்தீஸ்வராக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
போட்டிகள் ஆண்,பெண் இருபாலருக்கும் தனித்தனியே 6,8,10,12,14 மற்றும் திறந்த வயதுப் பிரிவினருக்கான போட்டிகளாக நடைபெறவுள்ளது.
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு வெற்றிக் கிண்ணமும் சான்றிதழும்,
4 முதல் 10வரையான இடங்களை பெறுபவர்களுக்கு வெற்றிக்கிண்ணமும் சான்றிதழும், 11 முதல் 15 வரையான இடங்களை பெறுபவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் அத்துடன் பங்குபற்றும் அனைவருக்கும்  சான்றிதழும் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறப்பு பரிசில்களாக
அதிக புள்ளிகள் பெறும் முதல் இரண்டு அணிகள் பாடசாலை அல்லது கழகம் (  ஒரு அணி சார்பாக பெற்றுக் கொள்ளும் புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்படும்)
போட்டி நடைபெறும் அன்றைய தினமும் பதிவுகளை மேற்க் கொள்ள முடியும்.
காலை 6.30am – 8.00am
அனுமதிக் கட்டணம் : 1000/=
VK Sports Academy
95390952
இலங்கை வங்கி யாழ்ப்பாணம்.
விண்ணப்ப முடிவு திகதி : 01/03/2026
நேரம் : 9.00pm Google form only
வீரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக தமது பதிவினை மேற்க் கொள்ள முடியும்.
ஒவ்வொரு பிரிவுகளின் இறுதி முடிவு கிடைக்கப் பெற்றதும் பரிசளிப்பு நிகழ்வு நடைபெறும்.
மேலும் போட்டி பற்றிய விபரங்களை அறிய கீழ் உள்ள இணைப்பின் மூலமாக குழுவில் இணையவும்
மேலதிக தகவலுக்கு
Whatsapp  : 0751620869

About The Author

Share This:

Leave a Reply

You may have missed