UNP ஜனாதிபதி வேட்பாளர் முடிவு சிறுபான்மை கூட்டணி கட்சிகளின் கையில் ?
இன்னும் சில நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரைப் பற்றி சாதகமான முடிவு வெளிவரும் வேலைவாய்ப்பு மற்றும் விளையாடு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று என்று கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் கட்சியின் கட்சி மூத்த தலைவர்கள் சிறுபான்மை கட்சிகளுடன் வேட்பாளர் குறித்து இன்னும் சில நாட்களில் பேச இருக்கிறார்கள் என்று அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நேற்றைய கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த சந்திப்புக்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். சிறுபான்மை கட்சிகளுடனான சந்திப்புகள் நிச்சயம் வெற்றிகரமாகஇருக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனால் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முடிவு சிறுபாண்மை கட்சிகளான முஸ்லீம் காங்கிரஸ்,தமிழ் கூட்டமைப்பு மற்றும் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் கையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி சஜித் பிரேமதாச ஆதரவு நிலை எடுத்திருந்தாலும், தமிழ் கூட்டமைப்பு இது பற்றி கருத்து எதுவும் கூறவில்லை. இருந்த போதிலும், சஜித்தின் அண்மைய யாழ் விஜயத்தின் போது , கூட்டமைப்பு MP களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது