Sat. Jan 17th, 2026

UCMAS யாழ்ப்பாண கிளை மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை

யாழ் மாணவர்கள் ஜோர்ஜியாவில் நடைபெற்ற மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச மனக் கணிதப் போட்டி அண்மையில் ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்றது.
இதில் UCMAS யாழ்ப்பாண கிளையில் இருந்து 7 மாணவர்கள் ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற  சர்வதேச ucmas மனக்கணித போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதில் வேல்ரூபன் விகாஸ் , ஆண்ட்ரூ ஜோன் ஜஸ்மியன் , ரஜிதரன் ஆராதித் மற்றும் ஆதனா வசந்தபிரசாத் குமார ஆகியோர் முதலாம் இடத்தினையும்,  ஆர்வினா வசந்தபிரசாத் குமார மற்றும் ஆத்மிகா இதயபவன் ஆகியோர்  இரண்டாம் இடத்தினையும், அமிர்தினி வித்தியாதரன் மூன்றாம் இடத்தினையும் பெற்று எமது மண்ணிற்கு   பெருமை சேர்த்துள்ளனர்.
பல்வேறுபட்ட நாடுகள் கலந்து கொண்ட இப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி இவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் கிளைகள் யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்