மரண அறிவித்தல்
வேலனை கிழக்கு 4ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நித்தியராசா செந்தமிழ் செல்வி (செல்வி) 11.09.2019 புதன் கிழமை அன்று இறைபதம் அடைந்துள்ளார்
அன்னார் காலம் சென்ற திருஞானசெல்வம் பத்மாவதி அவர்களின் அன்பு மகளும்,
கோப்பாயை சேர்ந்த காலம் சென்ற அண்ணாமலை-இராசமணி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
நித்தியராசா (ஒய்வு பெற்ற தபால் ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும், அமரர் ஜனனி, மற்றும் பிரணவி ( Velanai Centrel college), டதுசிகா ( Ramanthan college),
மற்றும் கபிலாஸ் ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,
செந்தமிழ்செல்வன் (France) உஷாநந்தினி (London) குமரகுரு(London) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பார்த்தீபன் (London) தர்ஷினி (London). ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்,
அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் வேலனை கிழக்கு 4 ஆம் வட்டாரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காலை 10 மணியளவில் சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.
இடம்
4ஆம் வட்டாரம், வேலனை கிழக்கு
வாழ்ந்த இடங்கள்
4ஆம் வட்டாரம், வேலனை கிழக்கு