மரண அறிவித்தல்
கச்சாய் தெற்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஞானசேகரம் நேற்று 09.09.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை செல்லம்மா அன்பு மருமகனும் காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புச் சகோதரனும், திருச்செல்வம் அவர்களின் அன்பு மைத்துனரும், சச்சிதானந்தமணி அவர்களின் அன்புக் கணவரும், மேகலைச்செல்வி (கலாச்சார உத்தியோகத்தர் பிரதேச செயலகம் பளை), மிதிலைச்செல்வி (புத்தளம்), ஜனார்த்தனன் (லண்டன்), தமிழ்ச்செல்வி (ஆசிரியை யா/கெற்பேலி அ.த.க.பாடசாலை), ஞானச்செல்வி (ஆசிரியை யா/சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை), பார்த்தீபன் (கிராம அலுவலகர் மீசாலை மேற்கு), ஆகியோரின் பாசமிகு தந்தையும், இந்திரகுமார் (MRA, ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை), மகேந்திரன் (சாரதி, பிரதேச செயலகம், புத்தளம்), இராஜநந்தினி (லண்டன்), தனுசா (DO பிரதேச செயலகம் ஊர்காவற்துறை), தயாபரன் ( அலுவலக உதவியாளர் யா/கச்சாய் மகா வித்தியாலயம்), மணிவண்ணன் (ஆசிரியர் யா/கச்சாய் மகா வித்தியாலயம்), குமணன், சிவகல்யாணி (லண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ராம்குமார், நிலானிகா, மதுஷாயினி, அனுராம், ஆத்மிகா, ஆகன்யா, தனுஷயன், ஆரணன், அஜிஷ், மதுரன், விதுரன், அபிருத்தன், ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 10.09.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 3 மணிக்கு கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
இடம்
கச்சாய் தெற்கு கொடிகாமம்
வாழ்ந்த இடங்கள்
கச்சாய் தெற்கு கொடிகாமம்