Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் தற்போது வட்டுக்கோட்டை சங்ரத்தை றோட் எனும் முகவரியில் வசித்தவருமாகிய சோமசுந்தரம் உமாபதிசிவம் நேற்று முன்தினம்  30.08.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற தங்கமலர்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும் கோபிநாத்,  பிரசாந்தன்(asst. restaurant manager, Cinnamon grand hotel), சிவாணி (உத்தியோகத்தர் இலங்கை வங்கி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  திருமதி ஆதவன் ஜெயந்தி (நோர்வே) அவர்களின் சிறிய தந்தையும் நிரஞ்சன் (கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களம்) பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,  டிலக்சன்,  தனுசன்,  தரணிகா, அக்சயா, ஆருஷன், வைஷாலி, ஆகியோரின் பாசமிகு பேரனும் அருள்நந்தி, காலஞ்சென்ற இராசநாயகம் வள்ளியம்மை ஆகியோரின் அருமைத் தம்பியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 01.09.2019 காலை 8 மணிக்கு வட்டுக்கோட்டை சக்கரத்தை றோட் எனும் முகவரியில்உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
0773366628 (மகன் பிரசாந்தன்)
Share This:

இடம்

வட்டுக்கோட்டை

வாழ்ந்த இடங்கள்

உருத்திரபுரம், கிளிநொச்சி

You may have missed