மரண அறிவித்தல்
அத்துளு அம்மன் கோவிலடி, கட்டைவேலி,கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு பத்தானை மற்றும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா புஸ்பராஜா 29-08-2019 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற தம்பையா செல்லாச்சி தம்பதிகளின் ஏக புத்திரனும் காலஞ்சென்ற பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் மருமகனும் புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவரும் துமிலன், ஜனகன், கீரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் புஸ்பராணி(அமரர்) அவர்களின் அன்பு சகோதரனும் கிருஸ்ணபிள்ளை(கனடா) கணேசராசன்(அமரர்), சோமாஸ்கந்தராசா(பிரான்ஸ்), சிவயோகராசா(லண்டன்), பூபாலசந்திரன்(லண்டன்) தேவராணி(லண்டன்), செல்வராணி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.30 முதல் இரவு 9 மணி வரை அஞ்சலிக்காக ‘மகிந்த மண்டபம்’ இல-591,காலி வீதி, கல்கிசை, இலங்கை என்னும் முகவரியில் வைக்கப்பட்டு நாளை 02-09-2019 திங்கள் காலை 8 மணிக்கு ஈமக்கிரிகைகள் நடைபெற்று காலை 9.30 மணிக்கு தகனகிரிகைக்காக கல்கிசை இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
மருமகன் றதீஸ் (இலங்கை)0776690208
இடம்
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடங்கள்
அல்வாய் கிழக்கு , பிரித்தானியா