Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கோவில் வீதி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராசையா கடந்த 27.08.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,  லலிதாதேவி (நோர்வே) தயாநிதி,  முருகானந்தன் (நோர்வே) சிவானந்தன் (நோர்வே) ஜெயநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவகுமார்,  சந்திரமெளலீசன் (ஓய்வு பெற்ற பகுதி நிலை மேற்பார்வையாளர் சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்) சிவானி, யோகநாயகி, கிரிஷான், (Accounts Executive Tokyo Cement group Colombo), ஆகியோரின் அன்பு மாமனாரும் தீபனா, தர்சனா, சாரங்கன்,  சிவமைந்தன் (மருத்துவ பீட மாணவன் Belours) கெளரிபாலன் (மருத்துவ பீட மாணவன் யாழ்ப்பாணம்) மிஷெல்லா, மிஷானா, யுவன்,  ஆதிரையான், சந்தோஷ், கவிஷன் (மாணவர்கள்  சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை,  தங்கம்மா,  நடராசா, முத்தம்மா, ஆகியோரின் அன்புச் சகோதரனும் நேசமலர்,  ஞானமலர், பரமசிவம்,  சிவராஜலிங்கம், பரமேஸ்வரி,  சிவயோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இல.117.கோவில் வீதி நல்லூரில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

சுதுமலை

வாழ்ந்த இடங்கள்

நல்லூர்

You may have missed