Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

நாகர்கோவில் வீதி எழுதுமடுடுவாளைப் பிறப்பிடமாகவும் ஆறுமுகம் வீதி நுணாவில் மேற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோதிலிங்கம் நேற்று முன்தினம் 26.08.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அருணாசலம் நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் பூபதியம்மா,  சுந்தரலிங்கம்,  மனோரஞ்சிதம்,  அமிர்தலிங்கம் (கனடா), யோகலிங்கம் (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரனும் மணிவண்ணன் (லண்டன்), முகுந்தன் (அவுஸ்ரேலியா), மதுமதி (அவுஸ்ரேலியா), கோகுலபாலன் (லண்டன்), வைதேகி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகன்யா (லண்டன்), முகுந்தன் (அவுஸ்ரேலியா), திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மனுஜன் (லண்டன்), வர்ஷனா (லண்டன்), அபிஷேக் (அவுஸ்ரேலியா), லக் ஷாஜினி , அருண்கிரிஸ், அர்ஜன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 29.08.2919 வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கண்ணாபிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
0770366355
ஆறுமுகம் வீதி
நுணாவில் மேற்கு சாவகச்சேரி.
Share This:

இடம்

நாகர்கோவில் வீதி எழுதுமடுடுவாள்

வாழ்ந்த இடங்கள்

நுணாவில் மேற்கு சாவகச்சேரி

You may have missed