Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல் 

கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி விஜேந்தினி சிறிஸ்கந்தராசா நேற்று 26.08.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா மற்றும் சற்குணமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான கந்தையா,  நாகேஸ்வரி,  சோமசுந்தரம்,  கமலாம்பிகை ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் கஜேந்தன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,  காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், கமலநாதன்,  மற்றும் சந்திரசேகரம் மோகனமூர்த்தி, சிவசுந்தரம்,  சிறிவசந்தாக்கா, விசயகுமாரி, இராசகுமாரி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் ஞானாம்பிகை, சிறிசற்குணராசா, சிறிவிக்னேஸ்வரராசா ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 28.08.2019 புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
0776184031
62கீழ்11, நெடுங்குளம் வீதி
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
Share This:

இடம்

கொழும்புத்துறை

வாழ்ந்த இடங்கள்

கொழும்புத்துறை

You may have missed