Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

ஊரிக்காடு வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமுத்து நடராசா நேற்று 20.08.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு அன்னமுத்து தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இராசமணி, செல்லம்மா,  பொன்னுக்கண்டு, பொன்னம்பலம்,  சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 21.08.2019 புதன்கிழமை காலை 11 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மயிலியதனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Share This:

இடம்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை

வாழ்ந்த இடங்கள்

வல்வெட்டித்துறை

You may have missed