Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

திருமதி செளபாக்கியவதி (பெரியபிள்ளை), கதிர்காமநாதன்
பெரிய நாவலடி, கொடிகாமத்தைச் சேர்ந்த திருமதி செளபாக்கியவதி கதிர்காமநாதன் நேற்று 16.08.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் சி.கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,  ராதிகா,  காலஞ்சென்ற ரேணுகா மற்றும் சிவதாசன் (சிவா மரக்கறி வியாபாரி கொடிகாமம்), பகீரதன் (ரதன் வெல்டிங் கொடிகாமம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  வினோதினி, நிசாந்தினி,  ஆகியோரின் அன்பு மாமியும்,  தேனுகா, தனுசிகன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,  அ.திருநாவுக்கரசு (ஓய்வு நிலை அதிபர்,  சமாதான நீதிவான்), காலஞ்சென்ற அ.யோகராசா, மற்றும் லீலாவதி (மத்திய வங்கி) அ.இராமச்சந்திரன் (டென்மார்க்), ஆகியோரின் அன்புச் சகோதரியும் சிவகுமாரன் காலஞ்சென்றவர்களான சிவயோகம், சிவராணி, புஸ்பராணி,  கணேசலிங்கம் (துரை), ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொடிகாமம் வேவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
பெரிய வளவு நாவலடி வீதி
கொடிகாமம்.
Share This:

இடம்

பெரிய நாவலடி, கொடிகாமம்

வாழ்ந்த இடங்கள்

கொடிகாமம்

You may have missed