மரண அறிவித்தல்
காரைநகர் பெரியமணலைப் பிறப்பிடமாகவும் வலந்தலை சயம்பு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை பத்மநாதன் நேற்று 15.08.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகளும், பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், விமலச்சந்திரன், வரலட்சுமி (ஆசிரியை கிளி/ தர்மபுரம் மத்திய கல்லூரி), பரமேஸ்வரன், தவறஞ்சன், ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாலறூபி (மருத்துவமாது, போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), அருள், யசோதினி, ஆகியோரின் பாசமிகு மாமியும், நல்லம்மா, நேசரத்தினம், வேலுப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் சகோதரியும், நாகலிங்கம், தேவராசா, புஸ்பதேவி, சிவசுப்பிரமணியம் காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற இரட்ணசபாபதி அவர்களின் அன்புச் சகலியும், பிரணவி, பிரஜித் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காலை 8.30 மணிக்கு சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
இடம்
பெரியமணலை, காரைநகர்
வாழ்ந்த இடங்கள்
வலந்தலை