மரண அறிவித்தல்

தோற்றம்
5 June, 1963மறைவு
11 March, 2025திரு.குலவீரசிங்கம் முருகதாஸ் (ஓய்வு நிலை உத்தியோகத்தர் நீர்ப்பாசன திணைக்களம் - கிளிநொச்சி, குயின்ஸ் Travel உரிமையாளர் கிளிநொச்சி) (வயது : 62)
2ம் வட்டாரம் புங்குடுதீவு
56/3 திருவையாறு
2ம் வட்டாரம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் 56/3 திருவையாறினைப் நிரந்தர வசிப்பிடமாகவும் 154, A9 பிரதான வீதி, இரணைமடு திருமுறிகண்டியினை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குலவீரசிங்கம் முருகதாஸ் அவர்கள் இன்று (11.03.2025) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம் நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி நாகேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும், ஜெயலதாவின் பாசமிகு கணவரும், விமலராணியின் அன்புச் சகோதரரும், திவாகர் (அருள்முருகன் Agro Center கிளிநொச்சி), பார்த்தீபன் (குயின்ஸ் Travel – கிளிநொச்சி), டிஷாந்தினி (ஆசிரியர் மாங்குளம் மகா வித்தியாலயம்), தட்சாயினி (World vision – கிளிநொச்சி), மதுசாயினி ( மாணவி – திறந்த பல்கலைக்கழகம் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரேணுகா (MPCS – பண்டத்தரிப்பு), தினோஜன் ( மருத்துவ பிரதிநிதி – வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், பவீஷனின் பாசமிகு பேரனும், ஜெயக்குமார்,இராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (12.03.2025) புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பொன்னகர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.