மரண அறிவித்தல்

தோற்றம்
25 February, 1949மறைவு
3 January, 2025திரு.சின்னத்துரை ஜெகநாதன் (முன்னாள் சிறைக்காவல் அதிகாரி) (வயது : 76)
நயினாதீவு 2ம் வட்டாரம்
கனடா
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜெகநாதன் அவர்கள் கடந்த (03-01-2025) வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கனடாவில் (07.01.2025) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
அன்னார், காலஞ்சென்ற S.R சின்னத்துரை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் தவப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான A.K சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், மற்றும் கனகாம்பிகை (Register of Marriage) அவர்களின் ஆருயிர்க் கணவரும், காந்திமலர் அவர்களின் பாசமிகு சகோதரரும், ஜெசிதா, ஜெசிந்தா, ஜெனிதா, ஜெய்சுரேஷ், காலஞ்சென்ற ஜெய்கணேஷ், மற்றும் ஜெய்ரமேஷ், ஜீவிதா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மோகனாம்பிகை, மகேஸ்வரி, தணிகாசலம், திவாகரன் ஆகியோரின் மைத்துனரும்,
குமாரசூரியர், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், செல்வரெத்தினம் மற்றும் சிவரஞ்சினி ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற மணிவண்ணன், மற்றும் சுரேஸ்குமார், சிவறஞ்ஜனி, பிரதீபன், குல்ஜித், பாலமுகுந்தன் ஆகியோரின் அருமை மாமானாரும்,
ஜனனி, ஜனனன், அபிலாஸ், அஸ்வின், ஜெய்வின், ஜெவீனா, ஜெனிஷா, ஜெகன், ஜீவன், ஜெலீனா, ஜெலியா, ஜெய்லீ, பானுயா, ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்,
அன்னாரின் இரங்கல் நிகழ்வு நாளை (07.01.2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நயினாதீவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.