Fri. Jan 17th, 2025

மரண அறிவித்தல்

தோற்றம்

1946-10-31

தோற்றம்

31 October, 1946

மறைவு

14 November, 2024

அமரர் நாகையா துரைராஜா (வயது : 78)

பிறந்த இடம்
இளவாலை முள்ளானை
வாழ்ந்த இடம்
"இராஜகெளரி இல்லம்" மகாத்மா வீதி  அளவெட்டி 

மறைவு

2024-11-14

இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி, கோண்டாவில் மேற்கு, மகாத்மா வீதி அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகையா துரைராஜா அவர்கள் நேற்று  (14.11.2024) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகையா கண்மணி தம்பதியரின் அன்பு மகனும், கோண்டாவில் மேற்கு காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராஜகெளரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும் மற்றும் அனோசங்கர், றெஜிசங்கர், விஜிசங்கர், உதயசங்கர், துஷாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பற்குணராஜா (முத்துலிங்கம்), விக்கினராசா (சிவலிங்கம்), மற்றும் பத்மராணி, சிறிகாந்தா, ஜெயந்திமாலா, வசந்தகுமார் (ரஞ்சன்), ஜெயக்குமார், யோகராணி, காலஞ்சென்ற உருத்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராசேந்திரம், சிவலிங்கம், காலஞ்சென்ற சிவா, மற்றும் செளந்தரி, ஜெயம், கலாநிதி, தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (17.11.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முள்ளானை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு