மரண அறிவித்தல்
தோற்றம்
10 April, 1955மறைவு
21 January, 2024சின்னத்துரை சிவராசா (ஓய்வுநிலை இலிகிதர்- கட்டைவேலி ப.நோ.கூட்டுறவுச் சங்கம்) (வயது : 69)
பிறந்த இடம்
அந்தணத்திடல் கரவெட்டி
அந்தணத்திடல் கரவெட்டி
வாழ்ந்த இடம்
கரணவாய் மேற்கு கரவெட்டி
கரணவாய் மேற்கு கரவெட்டி
அந்தணத்திடல் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரணவாய் மேற்கு கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவராசா அவர்கள் இன்று (21.01.2024) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதியரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும் மற்றும் இரஞ்சினி (ஓய்வுநிலை பிரதி அதிபர் யா/நெல்லியடி மத்திய கல்லூரி), அன்புக் கணவரும், துவாரகன் (warranty soft, software Engineer) அவர்களின் பாசமிகு தந்தையும், சகானா (ஆசிரியர் யா/வட.இந்து மகளிர் கல்லூரி), அவர்களின் அன்பு மாமனாரும், ஆரவ் ( மாணவன் யா/வட.இந்து ஆரம்ப பாசாலை), அபினவ் (மாணவன் விபுலானந்தர் முன்பள்ளி), ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற சிவலிங்கராஜா மற்றும் மனோகரன், புஸ்பராணி, மல்லிகாதேவி, புனிதவதி, சற்குணராசா காலஞ்சென்ற தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், உதயா, இராசரத்தினம், செல்வரத்தினம், செல்வராசா, சாந்தி, அரியமலர், பாமினி, சாந்தினி, சிவனேந்திரன், தவேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (22.01.2024) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 2 மணியளவில் பூவசரம்திட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.