Tue. Oct 6th, 2026
மரண அறிவித்தல்

வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் முன்னர் கொழும்பு 5 கிருலப்பனையில் வசித்தவரும் அண்மைய வருடங்களாக அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்துவந்தவருமான திருமதி பத்மநிதி விமலராஜா 6 ஆகஸ்ட் 2023 சிட்னியில் காலமானார்.

அன்னார் ஓய்வுபெற்ற சட்டத்தரணியும் தொழில் நீதிமன்ற நீதிபதியுமான வேலாயுதம் விமலராஜாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற ஏ.ஆர்.சுப்பிரமணியம் — பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற வேலாயுதம் — செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற மகாலிங்கத்தின் ( ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் ) அன்புச் சகோதரியும் சுபேந்திரா ( சட்டத்தரணி இலங்கை & அவுஸ்திரேலியா ), புவேந்திரா, காலஞ்சென்ற விமலினி, பத்மரஜீந்திரா (இலங்கை ) ஆகியோரின் அன்புத் தாயாரும் றோஹினி,பவானி, நந்தகுமாரன் ( பிறிஸ்பேன் ) புண்ணியசீலி பியதாச (இலங்கை ) ஆகியோரின் அன்பு மாமியாரும் சுபேதா, றோஹிதா,லக்மி, லகித், நந்திகா (பிறிஸ்பேன் ),விமன்யா, வினால் ஆகியோரின் அன்பு பாட்டியுமாவார்.

(இலங்கையையும் பிறிஸ்பேனையும் சேர்ந்தவர்களை தவிர ஏனைய அனைவரும் சிட்னியில் வசிக்கிறார்கள் ).

சிட்னியில் நடைபெறவிருக்கும் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்

Share This:

இடம்

கரவெட்டி

வாழ்ந்த இடங்கள்

அவுஸ்ரேலியா

You may have missed