மரண அறிவித்தல்
தோற்றம்
18 October, 1948மறைவு
29 June, 2023கதிர்காமு சந்திரபோஸ் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், வலி. கிழக்கு பிரதேச சபை, முன்னாள் கிளை முகாமையாளர் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம், தெல்லிப்பளை) (வயது : 75)
பிறந்த இடம்
வளலாய் அச்சுவேலி
வளலாய் அச்சுவேலி
வாழ்ந்த இடம்
சன்னதி வீதி, பத்தமேனி, அச்சுவேலி
சன்னதி வீதி, பத்தமேனி, அச்சுவேலி
வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சன்னதி வீதி, பத்தமேனி, அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு சந்திரபோஸ் அவர்கள் கடந்த (29.06.2023) வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
கதிர்காமு தங்கம் தம்பதியரின் அன்பு மகனும், சின்னராசா சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும்,
தவமணி (கண்டு) அவர்களின் அன்புக் கணவரும், இராஜ் அகன் (இத்தாலி) நிலக்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும், அற்புதமலர் , காந்தமணி, பவளராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அமுதலிங்கம், சின்னத்துரை மற்றும் பாலசிங்கம்,சறோசா, தேவராசா, சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்ஷிகா(இத்தாலி) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலம்சென்ற கிருஸ்ணபிள்ளை, மற்றும் தேவராசா ஆகியோரின் சகலனும், அகிலேந்தன் (இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி) , உமாளன் (இத்தாலி), தர்ஷனா, சங்கீர்த்தனா ஆகியோரின் பெரிய தந்தையும், சஜீதா (ஆசிரியர்- யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்கம் வித்தியாலயம்) ஜீவநாதன், சுவிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கீதாலயன் , லவென்சன், ( கனடா)
திபிகா , டிலக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும், சஜிந், பிருந்தாவன் , ஆதவன், அக்சரா, தேனுஸ்றிகா ஆகியோரின் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (02.07.2023) ஞாயிற்றுகிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 11மணிக்கு
பத்தமேனி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்