மரண அறிவித்தல்

தோற்றம்
18 November, 1962மறைவு
7 May, 2023அமரர்.முருகேசு ஆனந்தராசா (வயது : 61)
பிறந்த இடம்
வதிரி கோட்டைத்தெரு
வதிரி கோட்டைத்தெரு
வாழ்ந்த இடம்
Netherland
Netherland
வதிரி கோட்டைத் தெருவை பிறப்பிடமாகவும், Zaan 25, 1703ME, Heerhugowaard, Netherland இனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு ஆனந்தராசா அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) இலங்கையில் இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு (கனகரத்தினம்) செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும், பொலிகண்டியைச் சேர்ந்த அமரர் தங்கவேல் (இரத்தின வாத்தியார்) மற்றும் பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும், ஜானகி (மாலி, Netherland) அவர்களின் அன்புக் கணவரும், நவீந்தன், அர்வின் (Netherland), ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆனந்தசோதியின் அன்புச் சகோதரரும், மதுமிதா, ஆகாஷ், அகிலாஷ், ஆகியோரின் அன்பு மாமனாரும், அமரர் ஆனந்தராஜா (ரவி), மற்றும் வசந்தி (இலங்கை), ஜெயந்தி (இலங்கை), சாந்தி (U.S.A.), தயாளன் (U.S.A.), சுகந்தி (U.S.A.) அவர்களின் அன்பு மைத்துனரும், அருமைநாயகம் (இலங்கை), பாஸ்கரசோதி இலங்கை), புலேந்திரன்(U.S.A.), மாலதி(U.S.A.), வசீகரன்(U.S.A) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10.05.2023) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் சின்னக்கடை பொலிகண்டியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்