மரண அறிவித்தல்

தோற்றம்
16 May, 1958மறைவு
3 May, 2023அமரர்.இராசையா தர்மலிங்கம் (வயது : 65)
பிறந்த இடம்
பலாலி தெற்கு ,வசாவிளான்
பலாலி தெற்கு ,வசாவிளான்
வாழ்ந்த இடம்
புகையிரத வீதி, மல்லாகம்
புகையிரத வீதி, மல்லாகம்
பலாலி தெற்கு வசாவிளானை பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை ஊராவில் மாங்கொல்லையை நிரந்தர வசிப்பிடமாகவும், புகையிரத வீதி மல்லாகத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தர்மலிங்கம் அவர்கள் இன்று (03.05.2023) புதன்கிழமை சிவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதியரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணேசன் மனோன்மணி தம்பதியரின் அன்பு மருமகனும், யமுனாதேவியின் அன்புக் கணவரும், கமலாதேவி, கோபாலசிங்கம், கணேசலிங்கம், கமலாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தாரணி (பிரதேச செயலகம் நல்லூர்), பிரசாந் (வாகைத்தமிழ் இணைய வானொலி உரிமையாளர் -ஜேர்மனி), தினேஸ் (S -Lon விற்பனை பிரதிநிதி), நிசாந் (பொறியியலாளர்), சசிகாந் (BS Travel Pvt Ltd, Jaffna உரிமையாளர்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், லதீசன் (ஆசிரியர், கோப்பாய் சரவணபவாந்தா வித்தியாலயம்), சோபிகா (பாலர்பாடசாலை – ஜேர்மனி), தனிசா (பிரதேச சபை சுன்னாகம்), பத்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும், சந்தோஸ், இலக்கியா, அஸ்வினி, நிஷானா, அக் ஷயன், ஜாதவ், ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (04.05.2023) முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு
கும்பத்தினர்