மரண அறிவித்தல்

தோற்றம்
29 December, 1951மறைவு
13 August, 2019சிவப்பிரகாசம் பத்மநாதன்(உரிமையாளர் சிவன் ஸ்ரோர்ஸ் பரமேஸ்வராச் சந்தி) (வயது : 68)
பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
கொக்குவில் கிழக்கு
கொக்குவில் கிழக்கு
சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் பத்மநாதன் நேற்று 13.08.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தைவேல் சோதிராசா காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ராஜமனோ அவர்களின் அன்புக் கணவரும் நிரோசன், விசாகன் (The video Bloossom), துவாரகன், பகிரேகா (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை – தொண்டர் ஆசிரியை), ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஜெகராஜசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரனும் திருமதி முத்துராணி அவர்களின் அன்பு மைத்துனரும், திருமதி சந்திரகலா, ராகுலன் ஆகியோரின் சிறிய தந்தையும் சிவகுமார், தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காயத்திரி, பவித்திரா, மைத்திரி, மயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும், தர்மினி, உத்திரதர்சினி, கோபிநாத், மயூரன் ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற சிவகுமாரன் மற்றும் நிர்மலன், அஜந்தினி, கேசினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், கோபிகா, சசிரேகா, நிதர்சன், நிதுஷா, சுதர்சன், ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் மதீபன், சுகிர்தன், மயூஷிகா, கம்சிகன், ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 14.08.2019 புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக யாழ் கோம்பயன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0772840496
50/01, K.K.S.வீதி
கொக்குவில் கிழக்கு கொக்குவில்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்