மரண அறிவித்தல்
தோற்றம்
24 December, 1957மறைவு
27 August, 2022அமரர் கணபதிப்பிள்ளை விநாயகராசா (ஓய்வுநிலை கரவெட்டி பிரதேச சபை) (வயது : 65)
பிறந்த இடம்
அல்வாய் வடக்கு
அல்வாய் வடக்கு
வாழ்ந்த இடம்
அல்வாய் மடத்துக்கடவை
அல்வாய் மடத்துக்கடவை
அல்வாய் வடக்கு மடத்துக்கடவையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விநாயகராசா இன்று (26.08.2022) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவநாமம் நவமணி தம்பதியின் அன்பு மருமகனும், சத்தியகுமாரியின் அன்புக் கணவரும், திருமதி வானதி சுகிர்தன் (தபால் அதிபர், கரவெட்டி) திருமதி எழில்நிலா சசிகுமார் (இத்தாலி), கிருஷிகேசன் (ஆசிரியர் யா/நெடுந்தீவு மாவலித்துறை றோ. க.த.க.பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகிர்தன் (சூரி, தபாலகம் யாழ்ப்பாணம்) சசிக்குமார் (இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும், லக்னீஸ், அஸ்விகா, சஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும், மகாமணிதேவி, பாக்கியராசா, செல்வராசா, , ஸ்ரீமணிதேவி, மகேந்திரராசா
ஆகியோரின் அன்புச் சகோதரனும், அமரர் சதாசிவம் மற்றும் மீனாட்சியம்மா, சிவனேஸ்வரி, கலாபூசணம் சிவநேசன், ஸ்ரீநந்தனா, கலாபூசணம் சிவதாசன், ஜெயராசா, அமரர் ஜெயச்சந்திராதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (27.08.2022) சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சுகிர்தன் (மருமகன்)