மரண அறிவித்தல்

தோற்றம்
7 January, 1942மறைவு
22 May, 2022சாகித்திய ரத்னா தெணியான் (கந்தையா நடேசு - எழுத்தாளர்) (வயது : 80)
பொலிகண்டி
கலையருவி
தெணியகம் பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும் கலையருவியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெணியான் (கந்தையா நடேசு) அவர்கள் நேற்று (22.05.2022) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், மரகதம் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் (கணேசன்), பாக்கியவதி மற்றும் நவரட்ணம் (க.நவம்), மலர் சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும், உமா ஞானசீலன் (ஆசிரியை யா/வல்வெட்டி இ.த.க.பாடசாலை), ஜானகி அகிலன் (யா/பொலிகண்டி இ.த.க.பாடசாலை), ஆதவன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கரவெட்டி), துஷ்யந்தன் (ஆசிரியர் யா/ஹாட்லிக் கல்லூரி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஞானசீலன் (ஆசிரியர் யா/கலட்டி றோ.க.த.க.பாடசாலை), அகிலன் (பதவிநிலை உத்தியோகத்தர் யாழ் பல்கலைக்கழகம்), துஸ்யந்தி ஆதவன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், சுகாதார திணைக்களம், வடமாகாணம்), அனோஜா துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கார்த்திகேயன், ஆரணி, ஆதர்சன், சகாப்தன், கானவர்ஷினி, ஆத்மீகன், சாருகேசினி, ஆதித்யா, ஹம்சத்வனி, லலீஷன், திலக் ஷயன், காவியன், அர்வின், ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் பாலகிருஷ்ணர், சரவணமுத்து, சியாமிளா, நவரட்ணம், சிவராஜா, கந்தசாமி, ஆகியோரின் அன்பு மைத்துனரும், நேசமலர், தவமலர் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.