மரண அறிவித்தல்

தோற்றம்
3 November, 1953மறைவு
16 April, 2022சரவணமுத்து இராஜலிங்கம் (வயது : 68)
கருகம்பனை
முள்ளானை இளவாலை
கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், இளவாலை முள்ளானையை வசிப்பிடமாகவும், தற்போது கந்தானையில் வசித்தவருமான சரவணமுத்து இராஜலிங்கம் (சோமண்ணை) அவர்கள் நேற்று முன்தினம் (16.04.2022) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மராணி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும், சுரேஸ்குமார் (சுரேஸ்), சுகந்தினி (சுகா), சுதர்ஜினி (சுகி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், சின்னராசு, அன்னம், ஆகியோரின் அன்புச் சகோதரரும், கம்ஷிகா, சிறிகரன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், லதுஷன், ஹரிஷன், அக் ஷஜான், அக் ஷனா, ஆகியோரின் பாசமிகு பேரனும், பத்மாவதி, துரைராஜா, காலஞ்சென்ற பற்குணராசா (முத்துலிங்கம்), விக்கினராஜா, சிறிகாந்தா, ஜெயந்திமாலா, ஜெயக்குமார், வசந்தகுமார், காலஞ்சென்ற உருத்திரகுமார், மற்றும் யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.