மரண அறிவித்தல்

தோற்றம்
1 June, 1943மறைவு
12 April, 2022திரு.பெர்ணாண்டோ சீமாம்பிள்ளை (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் நீர்பாசன திணைக்களம் வவுனியா) (வயது : 79)
பிறந்த இடம்
மிருசுவில்
மிருசுவில்
வாழ்ந்த இடம்
மிருசுவில்
மிருசுவில்
மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பெர்ணாண்டோ சீமாம்பிள்ளை அவர்கள் கடந்த (12.04.2022) திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான பெர்ணாண்டோ வரோனிக்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து பொன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஜசிந்தாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான முத்துராசா, சூசைப்பிள்ளை, ஜோக்கின்பிள்ளை, சுவாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆன்காமல், டெனா, தர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரஞ்சன், பிரதீஸ், றொஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும், மன்ஷிகா, கிவ்ஷி, சன்கிஷான், டியோன், லியா, ஜேடன், தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் (18.04.2022) திங்கட்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் மிருசுவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்