Sat. May 16th, 2026
மரண அறிவித்தல் 

பன்னாலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செளபாக்கியகெளரி அம்பாள் ஏரம்பமூர்த்தி அவர்கள்11.08.2019 நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும் திரு.திருமதி. சோமசுந்தரம் அவர்களின் அன்பு மருமகளும் இரஞ்சன் (இணைப்புச் செயலாளர் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரம் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு), வசந்தன் (அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற அசோகன், திருமதி வாசுகி ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஜெயராணி (அவுஸ்ரேலியா), நவமலர் (நியூசிலாந்து), S.N.ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் டர்ஷான் (அவுஸ்ரேலியா), ஹங்கா, சுதன்,  ஹரிஹாலன் (நியூசிலாந்து), கேசிகன் (அவுஸ்ரேலியா), சரண்யா (IIL மாணவி), ஆகியோரின் அன்பு பாட்டியும் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற செளந்தரநாயகி, சிவயோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக 13.08.2019 இன்று செவ்வாய்க்கிழமை  காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை வைக்கப்பட்டு நாளை 14.08.2019 புதன்கிழமை   காலை 9 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகி பிற்பகல் 3 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

பன்னாலை

வாழ்ந்த இடங்கள்

கொழும்பு வெள்ளவத்தை

You may have missed