மரண அறிவித்தல்

தோற்றம்
12 October, 1943மறைவு
18 February, 2022தெய்வத்திரு சின்னத்தம்பி ஆறுமுகம் (ஓய்வு பெற்ற, இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர், ஓட்டுசுட்டான்) (வயது : 78)
பிறந்த இடம்
தண்ணீரூற்று முள்ளியவளையை
தண்ணீரூற்று முள்ளியவளையை
வாழ்ந்த இடம்
சட்டநாதர் வீதி, நல்லூர்
சட்டநாதர் வீதி, நல்லூர்
தண்ணீரூற்று முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் (ஓட்டுத் தொழிற்சாலையடி ஒட்டுசுட்டானில் வசித்தவரும்) சட்டநாதர் வீதி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆறுமுகம் அவர்கள் நேற்று (18.02.2022) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து தம்பதியரின் அன்பு மகனும் தெய்வத்திரு சந்திரமலர் அவர்களின் அன்புக் கணவரும், வாமதேவன் (கணக்காய்வு உத்தியோகத்தர், மாகாண கணகாய்வு அலுவலகம்), ஹரன் (பிரதேச களஞ்சியக் காப்பாளர், இ.போ.ச. கோண்டாவில்), வானதி (ஆசிரியர் வேலணை மத்திய கல்லூரி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகிழினி (மருந்தாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, யாழ்ப்பாணம்), சிவப்பிரியா (ஆசிரியர், மானிப்பாய் இந்துக் கல்லூரி), சிறிரமணன் (ஆசிரியர், கொக்குவில் இந்துக் கல்லூரி), ஆகியோரின் அன்பு மாமனாரும், சுபதீசனின் பேரனும், கணபதிப்பிள்ளை (தண்ணீரூற்று), காலஞ்சென்றவர்களான இராசம்மா, மனோன்மணி, ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (20.02.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இல,91,சட்டநாதர் வீதி, நல்லூரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்